சனி, நவம்பர் 20, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 6

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி .....

ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) முன்பாக நண்பரொருவர் வேர்களின் மூன்றாம் இதழில் இதே கட்டுரையின் ஒரு பகுதியில் நான் கராத்தே கன்னியர்கள் என்று குறிப்பிட்டது பற்றி ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார் . அதாவது , ''நாங்களே ஒரு சிலர்தான் இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றுகின்றோம் , நாங்களும் கூட கராத்தே கற்பது தவறாகுமா ? '' என்று . முதலில் கட்டுரையில் கராத்தே கற்பது பற்றிய கருத்தையே நான் குறிப்பிடவில்லை . முற்போக்கு வேடம் கட்டிய அவைகளுக்குள் உள்ள ஊத்த நாறிய நடைமுறைகளையே குறிப்பிட்டு இருந்தேன் . குறிப்பாக நன்கொடை வாங்குவது குறித்து மட்டுமே கட்டுரயின் அவ்விடத்தில் எழுதியிருந்தேன் . மீண்டுமொருமுறை வாசித்து தெளிக . கராத்தே கற்றோ கற்காமலோ இன்று இயக்கங்களில் இணைந்து குமுக மாற்றுப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தலை வணங்குகிறேன் !

கராத்தே கற்பது பற்றிய வினாவை எழுப்பியிருப்பதால் அது குறித்த என் கருத்தையும் இங்கே சொல்லிவிடுகிறேன் . கராத்தே கற்பதை ஆதரிக்கிறேன் , அதே நேரத்தில் வேற்று விளம்பரத்திற்காக மட்டும் பயன்பட்டால் அது போக்கிரித்தனமாகும் . குமுக மாற்றத்திற்கான ஒரு கருவியாக அது அமையும் போதுதான் லட்சியப் பாதையின் கனவுகள் நனவாகும் .
''சமுதாய மாற்றத்திற்காக தீவிரவாதிகள் படையில் முன்னணி வீரர்களாய் , முன்னோடிகளாய் தம்மை இழப்பதற்கு தயார்நிலையில் இருப்பவர்கள் அற்பனத்தை மேற்கொண்ட துறவிகள் ! இப்படிப்பட்ட தீவிர நிலைக்கு நம்மை ஆயத்தப்படுத்தி எதிர்கொள்ளும் சவாலை எற்றுவாழ வழிகாட்டுவதன் வார்தைப்பாடுகள் '' ( ௧)

( தீவிரவாதிகள் என்று தவறான சொல் இங்கு பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தங்களை போராளிகள் என்று குறிப்பிடுவதாக நினைக்கிறன் ) இப்படி , ஒரு புரட்சியை எழுத்தளவில் திருச்சவை நிறுவனங்கள் தங்களின் ஏடுகளில் எழுதி நிறைத்து வைத்துள்ளன . எதார்த்தத்தில் இவற்றில் எதை நடைமுறையாக்கி இருக்கின்றார்கள் . கூட்டுடமைத் தத்துவத்தின் எழுச்சியின் போது அதை மிஞ்சுகிற ரேரும் நோவரும் என்ற புரட்சிக் கட்டுரையை எழுதித் தள்ளியது திருச்சவை . ஆனால் செயல்பாட்டில் முதலாளித்துவத்திற்கு சோரம் போனது.

1. தெலுங்கர்களும் , மலையாளிகளும் உள்ள அவைகளில் எத்தனை தமிழர்களுக்கு பதவி கொடுத்துள்ளனர் ? உயர்பதவிகளை இன்று யார் வைத்துள்ளார்கள் ? பட்டியலிட்டால் முகத்திரை கிழிந்துபோகும்!
2. சாதிவெறி கொண்டு அலையும் நிறுவனத் தலைமை எங்கு தொல் தமிழருக்கு உரித்தான இடத்தை கொடுத்துள்ளது ? அவர்களது இடங்களைப் பிடித்து வைத்துகொண்டு ''பறையனும் பள்ளனும் இப்படிதான் ''என்றுதானே திமிர் கொண்டு பேசித்திரிகின்றனர்?
3. சேலம் ஆயர் இல்லத்தில் ஒரு பெண் குழந்தை தொழிலாளி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி சீரழிக்க பட்டபோது , புரட்சி வேடம் கட்டிய பெண் விடுதலை பற்றி வெடித்துப் பேசும் அவைகளெல்லாம் சொரிந்துகொண்டா இருந்தன ?
4. புதுபட்டிச் சிற்றூரில் அங்கி போட்ட வெரிநாயோன்று கன்னியர் இல்லம் புகுந்து வேலைகாரப் பெண்ணை நாசம் செய்து வந்தபோது உருட்டிமிரட்டி அமுக்கிவிட்டது துறவிகள் இல்லையா ?

போர்கலைகள் இங்கெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்கிறதா ? தற்காப்புக்காக கற்கும் போர்கலைகளுக்கு ஒரு வரம்பு உண்டு. தற்காப்பு என்பது போர்கலையின் ஒரு சிறு பகுதியே ! அநீதியை எதிர்த்துப் போராட தன்னை அர்பனிப்பவந்தான் போராளி . தன்னை தற்காத்துக் கொள்பவன் மட்டுமல்ல . தற்காப்பு அம்மாதிரி அநீதிக்கெல்லாம் எதிரான போரின் ஒரு பகுதியாக அமையும் போது பாராட்டாது இருக்க முடியுமா?
பணிசெயும் இடங்களில் ஏற்படும் இடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ளத்தான் இக்கலையை பயன்படுத்துகிறோம் என்கிறார்கள் சிலர் ,சரி .

1. எத்தனை பேர் இக்கட்டுகளும் , இடர்பாடுகளும் , எதிரிகளும் நிறைந்துள்ள இடங்களில் இன்று பணியாற்றுகின்றனர்.?
2. அப்படி ஈடுபடுகின்ற தோழர்களுக்கு உயர்நுட்ப தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படுகிறதா ?
3. இதுவரை கற்றுள்ளது நடைமுறைப் படுத்தக்கூடிய கலைகளா அல்லது உடற்பயிற்சிக்காக அளிக்கப் படுபவைகளா ?
4. தற்காப்புக் கலைகளும் சரி , போர்கலைகளும் சரி கற்கிரவர்கள் போராளிகளாக அல்லது குமுக மாற்றுப் பணியில் ஈடுபடுபவர்களாக இருந்தால் முதன் முதலாக ,தங்களுக்கு இதுவெல்லாம் தெரியும் என விளம்பரப் படுத்துவார்களா ? விளம்பரப்படுத்தினால் அவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன ?
5. ஒன்றை புரிந்துகொள்க , இயக்கங்கள் நிறுவனங்களாக மாறுவது இயல்பு. நிறுவனங்கள் ஒருபோதும் இயக்கங்களாக மாறாது. இறுக்கமான நிறுவனகள் உடைக்கப்பட்டு புதிய மக்களியக்கங்களுக்கு அவற்றை நல்ல உரமாக்க வேண்டும் . செத்துப்போன நிறுவனங்களை கட்டியளுவதைவிட்டு மக்களியக்கங்கள் துளிர்த்து எழட்டும் .
கறந்த பால் முலை புகா , கடைந்த வெண்ணை மோர்புகா. உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா , விரிந்த பூ உதிர்ந்தகாய் மீண்டும் போய் மரம்புகா , இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! ( 2)

உள்ள நேர்மையோடு தங்களைத் தாங்களே வினவுக்குட்படுதுவதே சரியானது. வினா ஒன்றை எழுப்பியதால் எம் கருத்தை இங்கு எடுத்துரைப்பது சரி என்றே இவ்வாறு விடையருத்தோம். இனி கட்டுரையைத் தொடர்வோம்...

தினமலரின் வாரமலரில் இரு திங்களுக்கு முன் ஒருவர் கடிதமொன்றை எளிதியிருந்தார். ( 3) திருச்சி மதுரை சாலையிலுள்ள பஞ்சப்பூர் மக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அது தேவையற்றது எனவும் குறிப்பிட்டு இருந்தார் . உண்ணாதிருந்து போராடினால் அதிகாரிகள் வருவதில்லை . மனு கொடுத்தால் தூர தூக்கிப் போட்டுவிடுகிறார்கள் . சாலை மறியல் செய்தால் ஓடி வருகிறார்கள் . பிரச்சனை தீர்கிறது. மக்களுக்கு வேறு வழியில்லாமல் அடைப்பது யார்? சரி மக்கள் தாங்கள் உரிமைக்காக போராடும் போது அதை எதிர்கின்ற ஒரு பிரிவினர் மற்றொன்றையும் நோக்க வேண்டும் .

தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக